டேய் மகனே 'காங்கிரஸ்'... வாட் டாடி... சாப்பிட்டியா காங்கிரஸ்... எஸ் டாடி... ராஜஸ்தானில் ருசிகரம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தானில் தீவிர காங்கிரஸ் ஆதரவாளரான வினோத் ஜெயின் என்பவர், தனது மகனுக்கு காங்கிரஸ் என பெயர் சூட்டியுள்ளது அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் ஜெயின் என்பவர் அங்குள்ள முதல்வர் அலுவலகத்தில் ஊடக பிரிவில் பணியாற்றி வருகிறார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. காங்கிரஸ் கட்சியின் அதிதீவிர தொண்டரான இவர் தனது குழந்தைக்கு காங்கிரஸ் என பெயர் வைத்துள்ளார்.
இந்நிலையில், அவரது குழந்தைக்கான பிறப்பு சான்றிதழை மாநில அரசு காங்கிரஸ் ஜெயின் என பதிவு செய்து வழங்கியுள்ளது. அந்த பிறப்பு சான்றிதழ் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
காங்கிரஸ் என இந்த குழந்தைக்கு பெயரிட முதலில் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஆனால், விடாப்பிடியாக இருந்து அவர்களை சம்மதிக்க வைத்ததாகவும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார் வினோத் ஜெயின்.
