‘2 ரூபா ஜாஸ்தியா?’.. 3 வருஷமாக நடந்த ‘நெய் பாட்டில் வழக்கு’.. சூப்பர் மார்க்கெட் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட தண்டனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Feb 28, 2020 08:59 AM

தனியார் சூப்பர் மார்க்கெட்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையைத் தாண்டி 15,002 ரூபாய் அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

super market fined 15 thousand for cheating 2 rupees over ghee

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவருடைய மனைவி சத்தியபாமா 2016ஆம் ஆண்டு நெய் பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். அதன் எம்ஆர்பி 50 ரூபாய் என்று அதில் இருந்தபோதிலும் கடைக்காரர்கள் அதை 52 ரூபாய்க்கு சத்தியபாமாவிடம் விற்றுள்ளனர்.

இதுபற்றி ஊழியர்களிடம் விளக்கம் கேட்ட சத்தியபாமாவுக்கும் விளக்கம் முறையாக கிடைக்கப்பெறவில்லை. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சத்தியபாமா. தொடர்ந்து 3 ஆண்டுகள் நடைபெற்ற இந்த 2 ரூபாய் வழக்கு தற்போது முடிவுக்கு வந்தது.

அதன்படி 3 ஆண்டுகளாக இந்த நெய் பாட்டில் வழக்கை நடத்திய சத்தியபாமா, மன உளைச்சலுக்கு ஆளானதற்காக 10,000 ரூபாயும் வழக்கின் செலவிற்காக 5000 ரூபாயும் கூடுதலாக வசூல் செய்த 2 ரூபாயும் சேர்த்து மொத்தம் 15,002 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சண்முகநாதன் இந்த சூப்பர் மார்க்கெட் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags : #COURT #GHEE