'கெஞ்சி பாத்த மாணவிகள்'...'கல்லூரி முதல்வரிடம் சிக்கிய செல்போன்கள்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Sep 17, 2019 04:25 PM

தடையை மீறி செல்போன் பயன்படுத்தியதால் கல்லூரி முதல்வர் அதனை அடித்து உடைக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Karnataka college principal smashes mobile in the class viral video

கர்நாடகாவில், வடகனரா மாவட்டம், கார்வாரில் இயங்கி வருகிறது எம்.இ.எஸ். சைத்தன்யா கல்லூரி, இக்கல்லூரியின் முதல்வராக இருப்பவர் ஆர்.எம். பட். இவர் மிகவும் கண்டிப்பானவர் என கூறப்படுகிறது. இவர் மாணவர்கள் கல்லூரிக்கு செல்போன் கொண்டு வர முற்றிலுமாக தடை விதித்துள்ளார். அப்படி இருந்தும், மாணவர்கள் பல வகுப்பறைகளில் செல்போன்கள் பயன்படுத்துவதாக அவருக்கு தகவல்கள் சென்றது.

இதையடுத்து மாணவர்களை விளையாட்டு மைதானத்திற்கு வரும்படி உத்தரவிட்டார். அப்போது சோதனை செய்ததில் 16 மாணவ, மாணவிகள் செல்போன் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த முதல்வர், அதன் பின்பு செய்த செயலால் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். பறிமுதல் செய்த செல்போன்களை மாணவர்கள் கண்முன்பே அவர் சுத்தியலால் உடைத்தார். மாணவிகள் எவ்வளோ கெஞ்சியும் அவர் கேட்கவில்லை.

இதனிடையே நடந்த சம்பவம் குறித்து பேசிய மாணவிகள், ''வெகு தூரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து வருவதால் பாதுகாப்புக்காக செல்போன்களை பயன்படுத்துகிறோம். ஆனால் அதனை கூறியும், கல்லூரி முதல்வர் எங்களின் செல்போன்களை பறித்து உடைத்து விட்டார்,’’ என வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags : #KARNATAKA #COLLEGE PRINCIPAL #HAMMER #SMASHES