‘பைக்கில் வந்த பள்ளி மாணவர்களால்’... ‘ஆட்டோ ஓட்டுநருக்கு நேர்ந்த கொடூரம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 24, 2019 11:59 AM

பள்ளி மாணவர்கள் சேர்ந்து தாக்கியதில், ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

auto driver died during school students attacked

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அனுமந்தபொத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் திலீப்குமார் (38). ஆட்டோ ஓட்டுனரான இவர், திங்கள்கிழமை வழக்கம்போல், கோகுலாபுரம் பகுதியில் சவாரிக்கு சென்றுள்ளார்.  அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த தனியார் பள்ளி மாணவர்கள் 3 பேர் ஆட்டோ மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கைகலப்பானதில் திலீப்குமாரை 3 மாணவர்களும் சேர்ந்து கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.

இதில் பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் திலீப்குமார், செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் திலீப்குமார் மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 மாணவர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #AUTODRIVER #CHENGALPATTU #STUDENTS