‘வந்தது பைக்ல, ஆனா ஃபைன் சீட் பெல்ட் போடாததுக்கு’.. அதிர்ந்துபோன நபர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 26, 2019 04:57 PM

இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் சீட் பெல்ட் அணியவில்லை என அபராதம் வசூலித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Police fined seat belt penalty for bike in Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜபிரபு. இவர் கடந்த வாரம் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, சாலையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்துள்ளனர். அப்போது ராஜபிரபு ஹெல்மெட் அணியாததால் அவரிடம் ரூ.100 அபராதம் வசூலித்து அதற்கான ரசீதை வழங்கியுள்ளனர்.

இதனை அடுத்து அபராததிற்கான ரசீதைப் பார்த்த ராஜபிரபு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதில் இருசக்கர வாகனத்தில் வந்த தனக்கு சீட் பெல்ட் அணியாததற்கான அபராதம் விதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. பணிச்சுமை காரணமாக அபராதத்தை மாற்றி பதிவிட்டதாக போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவருக்கு சீட் பெல்ட் அணியாததற்கான அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #TAMILNADUPOLICE #PUDUKKOTTAI #SEATBELT #PENALTY #TWOWHEELER #HELMET