வாக்குச்சாவடிக்குள் நுழைந்து.. ‘வாக்குப்பெட்டிக்கு’ தீ வைத்த நபர்கள்..! உள்ளாட்சி தேர்தலில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Dec 27, 2019 03:50 PM
திருவள்ளூர் அருகே வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்குப்பெட்டியை தீ வைத்து எரித்த நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே உள்ள பாம்பரம்பாக்கம் வாக்குச்சாவடி மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் வாக்குப்பெட்டியை வெளியே எடுத்து தீ வைத்துவிட்டு ஓடியுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் ஓட்டு பதிவு நிறுத்தப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது பொதுமக்கள் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலு படிக்க: ‘தங்கச்சி மயங்கி கிடக்கா, பீரோ உடஞ்சிருக்கு’!.. ‘மகனுக்காக நாடகமாடிய குடும்பம்’!.. சென்னையை அதிரவைத்த சம்பவம்..!
