பதினெட்டே 'மேட்ச்' தான் ... 'உலக கோப்பை'யில் அதிரடி காட்டி ... முதலிடத்தை அடைந்த லேடி 'ஷேவாக்'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Mar 04, 2020 06:25 PM

ஐசிசி வெளியிட்டுள்ள பெண்களுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனை சபாலி வர்மா முதலிடம் பிடித்துள்ளார்.

Shafali Verma from Indian women\'s cricket team reaches to the top

தற்போது ஆஸ்திரேலியா மண்ணில் பெண்கள் இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் லீக் போட்டிகள் நான்கிலும் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதியை எட்டியுள்ளது. இந்திய அணி லீக் போட்டிகளில் வெற்றி பெற முக்கிய காரணம் வகித்தவர் 16 வயதே ஆன சபாலி வர்மா ஆகும். நான்கு போட்டிகளில் பேட்டிங்கில் அதிரடி காட்டிய இவர் 161 ரன்கள் குவித்துள்ளார்.

வெறும் 18 டி 20 போட்டிகள் மட்டுமே ஆடியுள்ள சபாலி வர்மா 19 இடங்கள் முன்னேறி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணியின் மற்றொரு வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா பேட்டிங் தரவரிசையில் ஆறாவது இடத்திலுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #SHAFALI VERMA #ICC #WORLD CUP