‘கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்கமுடியாத தருணம் அது’.. ‘என்னோட இன்னொரு ஆசை’.. சச்சினின் உருக்கமான வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 03, 2019 05:49 PM
2011 -ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று 8 ஆண்டுகள் ஆன நிலையில் அது குறித்து உருக்கமான வீடியோ பதிவை சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2011 -ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனையைப் படைத்தது. கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படுபவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
உலகக் கோப்பை வெல்லும் இந்திய அணியில் தான் இருக்க வேண்டும் என்ற சச்சினின் நெடுநாள் ஆசை 2011 -ம் ஆண்டு நிறைவேறியது. இதனை அடுத்து இந்த ஆண்டு(2019) ஒருநாள் தொடருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் விரைவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் உலகக் கோப்பையை வென்ற தருணம் குறித்து சச்சின் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,‘எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் அது. 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் நானும் இருந்தேன் என நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் இந்திய அனியின் ஜெர்சியை நன்கு கவணித்திருந்தால், பிசிசிஐ லோகோவிற்கு மேல் 3 ஸ்டார்கள் இருக்கும், அது நாம் வென்றுள்ள உலகக் கோப்பையின் எண்ணிக்கையைக் குறிக்கும். அதேபோல் வரயிருக்கும் உலகக் கோப்பையை வென்று அதை நான்கு ஸ்டார்களாக மாற்ற வேண்டும் என்பதே என்னுடைய ஆசை’ என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
Best moment of my cricketing life.🏏 @cricketworldcup @BCCI pic.twitter.com/WByz1Y4cxX
— Sachin Tendulkar (@sachin_rt) April 2, 2019
