‘ஸ்பைடர்மேன்’ போல பறந்து பிடித்த ராகுலின் வெறித்தனமான கேட்ச்.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Mar 26, 2019 01:02 AM
ஐபிஎல் 2019 டி20 லீக்கின் அடுத்த போட்டி இன்று(25.03.2019) ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய இரு அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுலும், கிறிஸ் கெய்லும் களமிறங்கினர். இதில் ராகுல் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
இதனை அடுத்து ஜோடி சேர்ந்த கெய்ல் மற்றும் மயநாக் அகர்வால் ஜோடி அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. இதில் கிறிஸ் கெய்ல் 47 பந்துகளில் 79 ரன்களை அடுத்து அதிரடி காட்டினார். இதில் 112 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை கெய்ல் படைத்துள்ளார். 20 ஓவரின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை பஞ்சாப் எடுத்தது.
இதனை அடுத்து 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் விளையாடியது. அப்போது சாம் குர்ரான் வீசிய ஓவரில் ராஜஸ்தான் அணியின் ஸ்டீவ் ஸ்மித் தூக்கி பவுண்டரிக்கு அடிக்க, அந்த பந்தை பஞ்சாப் அணியின் கே.எல்.ராகுல் பறந்து கேட்ச் பிடித்து அவுட் செய்தார். மேலும் 12 -வது ஓவரை வீசிய பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், பந்தை வீசுவதற்கு முன்னாள் க்ரீஸை தாண்டிய ராஜஸ்தான் வீரர் பட்லரை அஸ்வின் அவுட் செய்தார். இதனால் பட்லருக்கும், அஸ்வினுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் 3 -வது நடுவர் இதனை அவுட் என அறிவித்தார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பின்னர் 20 ஓவரின் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
Rahuls' catch...!!https://t.co/0gzMVZK1W2
— Vidshots (@Vidshots1) March 25, 2019
This is how joss butler dismissed#RRvKXIP #HallaBol #RR #ashwin #buttler #jossbuttler pic.twitter.com/tXIt4fuH1g
— Stud Hun😎 (@Stud_londe) March 25, 2019