‘முதல் ஓவர், முதல் பந்து’..‘அவுட்டாக்கிய அஸ்வின்’.. ஷாக் ஆன ப்ரீத்வி.. வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 01, 2019 11:40 PM
அஸ்வின் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் டெல்லி அணியின் ப்ரித்வி ஷா அவுட்டான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் டி20 தொடரின் 13 -வது போட்டி இன்று(01.04.2019) மொகாலியில் நடைபெறுகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக பஞ்சாப் அணியின் கே.எல்.ராகுல் மற்றும் சாம் குர்ரன் களமிறங்கினர். இதில் ராகுல் 15 ரன்களிலும், சாம் குர்ரன் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மய்நங் அகர்வாலும் 6 ரன்னில் ரன் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
இதனை அடுத்து ஜோடி சேர்ந்த சர்ஃபரஸ் கான் மற்றும் டேவிட் மில்லர் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் சர்ஃபரஸ் கான் 29 பந்துகளில் 39 ரன்களும், டேவிட் மில்லர் 30 பந்துகளுக்கு 43 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களை பஞ்சாப் அணி எடுத்தது.
167 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரரான ப்ரித்வி ஷா அஸ்வின் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து 20 ஓவர்களின் முடிவில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் டெல்லி அணி இழந்து தோல்வியை தழுவியது. இதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 26 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் ஹனுமன் விகாரி(2), அவேஷ் கான்(4) ஆகியோர் ஒற்றை இழக்க ரன்னில் வெளியேறினர். மேலும், க்ரிஸ் மோரீஸ், ஹர்ஷல் பட்டேல், ரபாடா, சந்தீப் உள்ளிட்டோர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகினர்.
