‘அப்டி என்ன எடுத்துட்டு போயிருப்பாரு?’.. போட்டியின் நடுவில் திடீர் பரபரப்பு.. வைரலாகும் நபரின் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 30, 2019 08:13 PM

சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது வித்தியாசமான நபர் குறிக்கிட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

WATCH: Pizza delivery boy interrupted Sanju Samsons knock in IPL 2019

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சர்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டிநேற்று(29.03.2019) ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் அணியின் வீரர் சஞ்சு சாம்சன் சதம் அடித்து அசத்தினார்.

இவர் தனது 44 ரன்னில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது சைட் ஸ்க்ரீனில் ஒரு  பீட்சா டெலிவரி பாய் குறுக்கே சென்றதால் ஆட்டம் தடைபட்டது. அப்போது பந்துவீச்சாளர் பந்துவீச வந்த போது தடுத்து, சாம்சன் பீட்சா டெலிவரி பாய் குறுக்கே சென்றதை அம்பயரிடம் சுட்டி காட்டி நகர சொன்னார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை அடுத்து போட்டி வழக்கம் போல தொடர்ந்தது. 20 ஓவரின் முடிவில் ராஜஸ்தான் அணி 198 ரன்கள் எடுத்தது. ஆனாலும் அடுத்து விளையாடிய ஹைதராபாத், வார்னர் மற்றும் ரஷித் கான் உள்ளிட்டோரின் அதிரடி ஆட்டத்தால் அபார வெற்றி பெற்றது.

Tags : #IPL #IPL2019 #RRVSSRH #IPL2019 #SANJUSAMSON #VIRALVIDEO