‘இவரு நமக்கே டஃப் கொடுப்பாரு போல’.. ‘தல’ தோனியுடன் மோதும் பிரபல வீரர்.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 26, 2019 01:37 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் டேபிள் டென்னிஸ் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Dhoni and Shreyas Iyer faceoff in a game of Table Tennis

ஐபிஎல் டி20 லீக்கின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான 5-வது லீக் போட்டி இன்று(26.03.2019) டெல்லியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் விளையாடுவதற்காக டெல்லி சென்ற சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் டெல்லி அணியில் ரிஷப் பண்ட், சிரேயாஸ் ஐயர் போன்ற இளம் வீரர்களும், சூப்பர் கிங்ஸில் தோனி, ரெய்னா, ஜடேஜா, ஹர்பஜன் போன்ற அனுபவ வீரர்களும் உள்ளனர். இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் சிரேயாஸ் ஐயருடன் தோனி டேபிள் டென்னிஸ் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இப்போட்டியில் ஸ்கோர் என்னவாக இருக்கும் என ரசிகர்களிடம் டெல்லி கேபிடல்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தது. அதற்கு பலரும் தங்களது பதிலை அளித்துவந்தனர். மேலும் சூப்பர் கிங்ஸ் இதற்கு ம்ம்ம்... 7-0 வாகத்தான் இருக்கும் ஏனென்றால் அது ‘தல’நகரம்( தலைநகரம் டெல்லி) என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Tags : #IPL #IPL2019 #CSKVDC #MSDHONI #WHISTLEPODU #YELLOVE #VIRALVIDEO