“இது ஐபிஎல்.. க்ளப் மேட்ச் கெடையாது” .. ‘கடுப்பான கோலி’.. சர்ச்சையை ஏற்படுத்திய கடைசி பந்து.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 29, 2019 01:24 AM

மும்பை அணியின் கடைசி ஓவரை வீசிய மலிங்காவின் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

WATCH: No ball controversy in the last ball of the RCB vs MI match

ஐபிஎல் டி20 லீக்கின் 7 -வது போட்டி இன்று(28.03.2019) பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகள் மோதின.

முன்னதாக நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோல்வியைத் தழுவுயது. அதே போல டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியும் தோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 48 ரன்களும், யுவராஜ் சிங் 23 ரன்களும், சூர்யக்குமார் யாதவ் 38 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களும் எடுத்திருந்தனர். அதில் யுவராஜ் சிங் பெங்களூரு அணியின் வீரர் சஹால் வீசிய ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடுத்து அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடியது. 20 ஓவரின் முடிவில் பெங்களூரு அணி 181 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது. இதில் கேப்டன் விராட் கோலி 46 ரன்களும், ஏபி டிவில்லியர்ஸ் 70 ரன்களும் எடுத்திருந்தனர்.

இந்நிலையில் கடைசி பந்தில் 7 எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பெங்களூரு அணி இருந்தது. அப்போது மலிங்கா வீசிய கடைசி பந்து  ‘நோ பால்’ என கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது

Tags : #IPL #IPL2019 #ABDEVILLIERS #RCBVMI #VIVOIPL #BUMRAH #VIRATKOHLI #MALINGA #NOBALL #VIRALVIDEO