‘ஸ்டெம்புக்கு பின்னாடி இவர் இருந்தா இதெல்லாம் பண்ணக்கூடாது பாஸ்.. வைரலாகும் ‘தல’யின் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Mar 26, 2019 09:41 PM
டெல்லி அணியின் கேப்டன் ஷிரேயாஸ் ஐயரை ஸ்டெம்பிங் செய்ய முயற்சி செய்த தோனியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான 5 -வது ஐபிஎல் லீக் போட்டி இன்று(26.03.2019) டெல்லியில் நடைபெறுகிறது. இப்போட்டியில் விளையாடுவதற்காக டெல்லி சென்ற சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் டெல்லி அணியில் ரிஷப் பண்ட், சிரேயாஸ் ஐயர் போன்ற இளம் வீரர்களும், சூப்பர் கிங்ஸில் தோனி, ரெய்னா, ஜடேஜா, ஹர்பஜன் போன்ற அனுபவ வீரர்களும் உள்ளனர். இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ப்ரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இதில் அதிரடியாக ஆடிய ப்ரித்வி ஷா 24 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து டெல்லி அணியின் கேப்டன் ஷிரேயாஸ் ஐயர் களமிறங்கினார். அப்போது ஜடேஜா வீசிய ஓவரில் ஷிரேயாஸ் ஐயர் அடிக்க முயற்சி செய்யும் போது தோனி ஸ்டெம்பிங் செய்தார். ஆனால் அவர் கால் க்ரீஸ் உள்ளே இருந்ததால் நாட் அவுட் கொடுக்கப்பட்டது.
Super quick #MSD at it again
Look how quick @msdhoni is behind the stumps as Delhi Capitals’ captain Shreyas Iyer survives by a whisker.
Full video here ▶️https://t.co/rL0MU1cz5U #VIVOIPL #DCvCSK pic.twitter.com/wJr3FXcKCS — IndianPremierLeague (@IPL) March 26, 2019