‘இவரு அஸ்வினுக்கே டஃப் கொடுப்பாரு போல’.. ‘அடுத்து ஒரு மன்காட் வார்னிங்’.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 30, 2019 11:15 PM

மும்பை இந்தியன்ஸ் வீரர் க்ருணல் பாண்ட்யா மன்காட் முறையில் விக்கெட் எடுக்க முயற்சித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Krunal Pandya gives a mankad wicket warning

கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி இன்று(30.03.2019) பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பௌலிங்கை தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக டீ காக் 60 ரன்கள் அடித்து அசத்தினார்.

இதனை அடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் களமிறங்கினர். இதில் கே.எல்.ராகுல் நிதானமான ஆட்டத்தையே கடைபிடித்தார். ஆனால் மறுமுனையில் கிறிஸ் கெய்ல் அதிரடியாக ஆடி 40 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் கூட்டணி அதிரடியாக விளையாட ஆரம்பித்தது.

அதில் 10 -வது ஓவரை மும்பை அணியின் பந்துவீச்சாளர் க்ருணல் பாண்ட்யா வீசினார். அப்போது  மயங்க் அகர்வாலை மன்காட் முறையில் க்ருணல் பாண்ட்யா அவுட் செய்ய முயற்சித்தார். 43 ரன்களை அடித்திருந்த போது மீண்டும் க்ருணல் பாண்ட்யா வீசிய ஓவரில் மயங்க் அகர்வால் அவுட் ஆனார்.

இதனை அடுத்து 18.4 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 177 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதில் கே.எல்.ராகுல் 71 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Tags : #IPL #IPL2019 #MIVKXIP #KRUNALPANDYA #MANKADED #VIRALVIDEO