‘முடிஞ்சா புடிச்சு பாரு’..சென்னை மால் ஒன்றில் ஓடிய ஜிவா தோனி.. வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Mar 30, 2019 01:52 AM
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் மகள் ஜிவா தோனி சென்னயில் உள்ள மால் ஒன்றில் விளையாடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ஐபிஎல் டி20 லீக் 12 -வது சீசன் மார்ச் 23 -ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான அடுத்த டி20 லீக் டெல்லியில் நடைபெற்றது. இப்போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து சென்னை சேப்பாக்கத்தில் வரும் மார்ச் 31 -ம் தேதி நடைபெற இருக்கும் அடுத்த டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன.
இதனைக் காண சூப்பர் கிங்ஸ் வீரர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்னை வந்துள்ளனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் செல்ல மகள் ஜிவா தோனி சென்னையில் உள்ள மால் ஒன்றில் ஓடி விளையாடும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
