‘தலயின் தரமான சம்பவம்’.. கடைசி ஓவர் ஹாட்ரிக் 6,6,6. இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Mar 31, 2019 11:05 PM
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக ஆடி ராஜஸ்தான் அணிக்கு 176 ரன்களை இலக்காக வைத்துள்ளது.
ஐபிஎல் டி20 தொடரின் 12 -வது லீக் போட்டி இன்று(31.03.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அம்பட்டி ராயுடு மற்றும் வாட்சன் களமிறங்கினர். அதில் அம்பட்டி ராயுடு 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து களமிறங்கிய ரெய்னா அதிரடியாக ஆடி 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து வந்த கேப்டன் தோனி மற்றும் ப்ராவோ கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 27 ரன்களில் ப்ராவோவும் அவுட்டாகினார். 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் தோனி 75 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து அசத்தினார்.
— KhurShah (@ShahKhur) March 31, 2019