‘தமிழ் மாஸ் ஹீரோவின் பாடலுக்கு சூப்பர் ஆட்டம் போடும் ஜிவா தோனி’.. வைரலாகும் க்யூட் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 26, 2019 08:31 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் மகள் ஜிவா தோனி தமிழ் படத்தின் பாடல் ஒன்றுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது.

WATCH: Ziva Dhoni dances for tamil song, goes viral

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான 5 -வது ஐபிஎல் லீக் போட்டி இன்று(26.03.2019) டெல்லியில் நடைபெறுகிறது. இப்போட்டியில் விளையாடுவதற்காக டெல்லி சென்ற சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் டெல்லி அணியில் ரிஷப் பண்ட், சிரேயாஸ் ஐயர் போன்ற இளம் வீரர்களும், சூப்பர் கிங்ஸில் தோனி, ரெய்னா, ஜடேஜா, ஹர்பஜன் போன்ற அனுபவ வீரர்களும் உள்ளனர். இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முன்னதாக சென்னையில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியைக் காண தோனியின் மனைவி ஷாக்சி தோனி மற்றும் ஜிவா தோனி ஆகியோர் வந்திருந்தனர். அப்போது தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தில் இருந்து ‘ஒத்த சொல்லால’ எனும் பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டது. இந்த பாடலுக்கு ஜிவா தோனி ஆடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #IPL #IPL2019 #MSDHONI #CSK #ZIVADHONI #VIRALVIDEO #WHISTLEPODU #YELLOVEAGAIN