‘தல’யிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய பிரபல வீரர்.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 01, 2019 09:21 PM
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியிடம் ராஜஸ்தான் அணி வீரர் கிரிக்கெட் பேட்டில் ஆட்டோகிராஃப் வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான 12 -வது ஐபிஎல் டி20 லீக் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 175 ரன்களை எடுத்தது.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி 75 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார். மேலும் போட்டியின் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்த தோனியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி கடைசி வரை போராடி 8 ரன்களில் தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் அதிரடியாக ஆடிய சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இதனை அடுத்து போட்டி முடிந்த பின் தோனி ராஜஸ்தான் வீரர்களுடன் சகஜமாக பேசி மகிழ்ந்தார். அப்போது ராஜஸ்தான் அணி வீரரான கிருஷ்ணப்பா கவுதம் தனது கிரிக்கெட் பேட்டில் தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கி சென்றார்.
Some post-match banter after a Super win at the #AnbuDen last night! #WhistlePodu to the great comradeship across the squads! #Yellove🦁💛 pic.twitter.com/GIn5eRwPmo
— Chennai Super Kings (@ChennaiIPL) April 1, 2019
