அரசுப் பேருந்தில் சாகசம்... தலைகீழாகத் தொங்கும் மாணவர்கள்... உறைய வைக்கும் காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 02, 2019 07:20 PM

அரசுப் பேருந்தில் சாகசம் என்றப் பெயரில் பள்ளி மாணவர்கள் செய்த அட்டூழியங்கள், சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

school students dangerous stunts on govt bus goes viral

ஓரிடத்தில் அரசுப் பேருந்து வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது. பேருந்து நிற்கும் போது ஏறாமல், அதனைத் துரத்தியபடி மாணவர்கள் சிலர் ஓடுகின்றனர். ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு தொங்கும் மாணவன் ஒருவன், பின்னர் யோகாசனம் செய்வது போல் தலைகீழாகத் தொங்குகின்றான்.

பேருந்துப் பின்னே ஓடிவரும் மாணவர்கள் அனைவரும் 8-ம் வகுப்பு முதல் 10- வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் போல் காட்சியளிக்கின்றனர்.  ஒரு சிறுவன் மட்டும் ஜன்னலில் தொங்காமல், இதேபோல் பல மாணவர்கள் இவ்வாறு மாறி மாறி தலைகீழாகத் தொங்குகின்றனர்.

வீடியோவில் பதிந்துள்ள மாணவர்கள் அனைவரும் பள்ளி சீருடை அணிந்துள்ளார்கள். ஆனால், இந்த மாணவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவில்லை. மாணவர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டிருக்கும் போதே, பல வாகனங்கள் பேருந்து அருகிலேயே ஒட்டிய மாதிரி வந்துக்கொண்டிருந்தன.

மாணவர்களின் இந்தச் செயலைக் கண்டுப் பேருந்து உள்ளே இருந்த பயணிகள், நடத்துநர், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ந்தனர். நடத்துநர் எச்சரிக்கை விடுத்தும், அதனைப் பொருட்படுத்தாமல் மாணவர்கள் செய்த சாகசங்கள் பெற்றோர்களை அதிரவைத்துள்ளது. 

மேலும் தாங்கள் செய்த அட்டகாசங்களை வீடியோ எடுத்து, மாணவர்கள் அவர்களது டிக் டாக் ஆப்பில் பதிவிட்டுள்ளனர்.  இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags : #VIRALVIDEO #STUDENTS #SCHOOL #TIKTOK #CIRCUS #STUNTS #VEHICLES