‘யாக்கர் பும்ரா’..‘ஆர்சிபி ஜூனியர் பும்ரா’.. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 28, 2019 06:57 PM

ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் பும்ராவைப் போல பந்து வீசி அசத்திய இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Junior Bumrah bowls in RCB nets

ஐபிஎல் டி20 12 -வது சீசனின் 7 -வது லீக் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய அணியின் கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோகித் ஷர்மா ஆகியோர் களமிறங்குவதால் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, க்ரூணல் பாண்ட்யா உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர். பும்ரா சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நம்பர் ஒன் பௌலராக இருந்து வருகிறார்.

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் டி20 லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோல்வியைத் தழுவியது. இதனால் இன்று நடைபெற உள்ள மும்பைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டிய முனைப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் மும்பை அணி வீரர் பும்ராவின் பந்து வீச்சை சமாளிக்க பும்ராவைப் போல பந்து வீசும் மகேஷ் குமார் என்ற 22  வயதான இளைஞரை ஆர்சிபி அணி பயிற்சியில் ஈடுபட்டுத்தியுள்ளது. அதில் மகேஷ் குமார் பும்ராவை போன்ற யாக்கர் பந்து வீச அதை ஆர்சிபி வீரர்கள் எதிர் கொண்டு பயிற்சி செய்துள்ளனர். இது குறித்து தெரிவித்த மகேஷ் குமார்,‘ இந்த வாய்ப்பு கிடைத்தது மிகவும் சந்தோசமாக உள்ளது. இதன் மூலம் எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.

பும்ராவைப் போல பந்து வீசி அசத்தும் மகேஷ் குமாரின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #IPL #IPL2019 #RCBVSMI #VIRATKOHLI #BUMRAH #VIRALVIDEO #PRACTICESESSION