‘ஹாட்ரிக் விக்கெட் எடுத்தா இதெல்லாம் பண்ணுவாங்களோ’.. இணையத்தை கலக்கும் ப்ரீத்தி ஜிந்தா, சாம் குர்ரன் டான்ஸ் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 03, 2019 12:39 AM

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர் சாம் குர்ரன் எடுத்த ஹாட்ரிக் விக்கெட்டால் டெல்லி அணி வெற்றி வாய்ப்பை தவறவிட்டது.

WATCH: Sam Curran dance with Preity Zinta after Punjab beat Delhi

நேற்று(01.04.2019) ஐபிஎல் டி20 தொடரின் 13 -வது போட்டி மொகாலியில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக பஞ்சாப் அணியின் கே.எல்.ராகுல் மற்றும் சாம் குர்ரான் களமிறங்கினர். இதில் ராகுல் 15 ரன்களிலும், சாம் குர்ரன் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மய்நங் அகர்வாலும் 6 ரன்னில் ரன் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த சர்ஃபரஸ் கான் மற்றும் டேவிட் மில்லர் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில்  சர்ஃபரஸ் கான் 29 பந்துகளில் 39 ரன்களும், டேவிட் மில்லர் 30 பந்துகளுக்கு 43 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களை பஞ்சாப் அணி எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரரான ப்ரித்வி ஷா அஸ்வின் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். டெல்லி அணி 144 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெரும் தருவாயில் இருந்தது. அப்போது 18 -வது ஓவரை வீசிய சாம் குர்ரன் அதன் கடைசி பந்தில் ஹர்ஷல் பட்டேலையும், பின்னர் 20 -வது ஓவரின் முதல் மற்றும் இரண்டாவது பந்துகளில் ரபாடா மற்றும் லாமிசனேயை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். 8 ரன்களை சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறியது. இதனை அடுத்து 20 ஓவர்களின் முடிவில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் டெல்லி அணி இழந்து தோல்வியை தழுவியது.

இதனை அடுத்து ஆட்டம் முடிந்ததும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஸிந்தாவுடன் சாம் குர்ரன் நடனம் ஆடி அசத்தினார். இந்த வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது.

Tags : #IPL #IPL2019 #KINGSXIPUNJAB #PREITYZINTA #SAMCURRAN #VIRALVIDEO