‘நேஷனல் சூப்பர் ஸ்டார்’ காத்து வந்த ரகசியம்.. போட்டுடைத்த ‘ப்ராவோ’.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 28, 2019 09:00 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர அம்பட்டி ராயுடுவின் செல்போனை எடுத்து ப்ராவோ செய்யும் குறும்புத்தனமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Bravo make fun of Rayudu\'s phone

ஐபிஎல் டி20 லீக்கின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. இதனை அடுத்து டெல்லியில் நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் இடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான அடுத்த டி20 வரும் ஞாயிற்று கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதற்காக டெல்லியில் நடைபெற்ற போட்டியை முடித்துவிட்டு சூப்பர் கிங்ஸ் வீரர்கள் விமானத்தில் புறப்பட்டனர். அப்போது சூப்பர் கிங்ஸ் வீரரான ப்ராவோ, அம்பட்டி ராயுடுவின் செல்போனை எடுத்துக் காண்பித்து, ‘டீம் இந்தியா, நேஷனல் சூப்பர் ஸ்டார் அம்பட்டி ராயுடுவின் போனை பாருங்கள்’ என சக வீரர்களிடம் காண்பித்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #IPL #IPL2019 #WHISTLEPODU #YELLOVE 💛🦁 #CSK #BRAVO #VIRALVIDEO