‘1 பந்துக்கு 2 ரன் அவுட் எடுக்க நெனச்சா இப்டிதான் நடக்குமோ’.. வைரலாகும் வெறித்தனமான ரன் அவுட் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 31, 2019 08:46 PM

வார்னர் மற்றும் ஜானி பாரிஸ்டோவின் அதிரடியால் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

WATCH: Vijay Shankar made 2 run out in 1 ball

ஐபிஎல் டி20 தொடரின் 11 -வது லீக் போட்டி இன்று(31.03.2019) ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சன்ரைசர்சஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னரும், ஜானி பாரிஸ்டோவ் அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். இவர்களது கூட்டணி பெங்களூரு பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிக்ஸர்களால் சிதறடித்தது. இதில் ஜானி பாரிஸ்டோவ் 56 பந்துகளில் 114  ரன்களும், வார்னர் 55 பந்துகளில் 100 ரன்களும் எடுத்து அசத்தினர். 20 ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன்களை ஹைதராபாத் அணி எடுத்தது.

232 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடியது. ஆனால் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 19.5 ஓவரின் முடிவில் 113 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதில் கேப்டன் விராட் கோலி 3 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். பெங்களூரு அணியில் அதிகபட்சமாக கிராண்ட்ஹோம் 37 ரன்கள் எடுத்தார். அப்போது போட்டியின் 19 -வது ஓவரை வீசிய விஜய் சங்கர் கிராண்ட்ஹோமை ரன் அவுட்டாக்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #IPL #IPL2019 #SRHVRCB #VIJAYSANKAR #VIRALVIDEO #RUNOUT