‘அஸ்வின் VS முரளி விஜய்’.. டிஎன்பிஎல் மேட்ச்சில் நடந்த சூப்பர் சம்பவம்..! வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Aug 04, 2019 02:24 PM
தமிழ்நாடு ப்ரீபியர் லீக் சுற்றில் திருச்சி அணியின் சார்பாக விளையாடிய முரளி விஜய் மைதானத்தில் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிஎன்பிஎல் லீக் சுற்றின் 20 -வது போட்டி நேற்று திண்டுக்கலில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் ரூபி திருச்சி வாரியர்ஸ் ஆகிய இரு அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 178 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் முரளி விஜய் 99 ரன்களும், முகுந்த் 43 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் 19.1 ஓவர்களில் 182 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் திண்டுக்கல் அணியின் பேட்ஸ்மேன் ஜெகதீசன் 105 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இந்நிலையில் முதல் இன்னிங்ஸின் 16 -வது ஓவரை திண்டுக்கல் அணியின் கேப்டனும் சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் வீசினார். அந்த ஓவருக்கு முன்னதாக திருச்சி அணியின் சார்பாக விளையாடிய முரளி விஜய் குறும்பாக மைதானத்தில் நடனமாடினார். இதனை அடுத்து அந்த ஓவரில் அஸ்வின் நோபால் வீச, அடுத்த பந்தில் முரளி விஜய் சிக்ஸர் விளாசினார். இப்போட்டியில் முரளி விஜய் 1 ரன்னில் சதத்தை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.
R Ashwin 🆚 M Vijay!
The contest that was! Cricket is the winner! #NammaPasangaNammaGethu #TNPL2019 pic.twitter.com/Pqb5swNVHT
— TNPL (@TNPremierLeague) August 4, 2019
