‘இப்டி பாக்கெட்ல வச்சிக்கிட்டே தெரியிலன எப்டி’.. கடுப்பான அஸ்வின்.. வைரலாகும் அம்பயரின் செயல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 25, 2019 12:18 AM

பஞ்சாப் அணியை வீழத்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

WATCH: Umpires missing the ball during the RCB vs KXIP match

ஐபிஎல் டி20 தொடரின் 42 -வது போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு டிவில்லியர்ஸ் 82 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 46 ரன்களும், பார்த்தீவ் பட்டேல் 43 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி 202 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டகாரர்காளன கே.எல் ராகுல் 42 ரன்களும், க்ரிஸ் கெய்ல் 23 ரன்களும் எடித்தனர். இதனை அடுத்து மாயன்க் அகர்வால் 35 ரன்களும்,  மில்லர் 24 ரன்களும் கடைசியில் ஆடிய நிக்கோல்ஸ் பூரன் 28 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து கைகொடுத்தாலும், கடைசியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வியை தழுவியது.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸ் இடைவேளை முடிந்து பந்து வீச வந்த பஞ்சாப் அணி வீரர் நடுவரிடம்  பந்தை கேட்க, அவர் இல்லை என கூறினார். இதனை அடுத்து புதிய பந்து விளையாட கொடுக்கப்பட்டது. ஆனால் நடுவர் பேண்ட் பையில் பந்து இருந்ததை தான் மறந்துவிட்டதாக பின்னர் கூறினார். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : #IPL #IPL2019 #ABDEVILLERS #ASHWIN #RCBVSKXIP