‘மறுபடியும் அஸ்வின கோபப்பட வைச்சிடீங்களே’.. அப்டி என்ன பண்ணாரு ராகுல்?.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 05, 2019 07:21 PM

டுபிளிஸிஸ் மற்றும் ரெய்னாவின் அதிரடியான ஆட்டத்தால் சென்னை 170 ரன்களை குவித்துள்ளது.

WATCH: KL Rahul misfield the ball, Ashwin look angry

ஐபிஎல் டி20 லீக்கின் 55 -வது போட்டி இன்று(05.05.2019) மொகாலியில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை அணி ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டதால் கடைசி போட்டியை வெற்றியுடன் முடிக்க வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக டு பிளிஸிஸ் 96 ரன்களும், சுரேஷ் ரெய்னா 53 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.

இப்போட்டியின் 11 -வது ஓவரில் டுபிளிஸிஸ் அடித்த பந்தை கே.எல்.ராகுல் பிடிக்காமல் தவறவிட்டார். இதனால் அது பவுண்ட்ரி சென்றது. இதனை பார்த்த அணியின் கேப்டன் அஸ்வின் ராகுலை கோபப்படும் விதமாக பார்த்தார்.

Tags : #IPL #IPL2019 #KXIPVCSK #YELLOVE #WHISTLEPODU #KLRAHUL #ASHWIN