‘இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட் போட்டி’... 'அசத்தும் இந்திய வீரர்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 16, 2019 10:03 PM

இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், கவுன்ட்டி கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பௌலிங்கில் அசத்தி வருகிறார்.

Ashwin’s heroics for Nottinghamshire go in vain against Surrey

இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இங்கிலாந்து ட்ரென்ட்பிரிட்ஜில், நாட்டிங்காம்ஷைர் அணிக்காக விளையாடி வரும் அஸ்வின், சர்ரே அணிக்கெதிராக முதல் இன்னிங்சில் 69 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். அதேபோல் 2-வது இன்னிங்சிலும் 75 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.

இரண்டு இன்னிங்சிலும் சிறப்பாக பந்து வீசியதோடு, 2-வது இன்னிங்சில் அரைசதமும் அடித்தார். நாட்டிங்காம்ஷைர் அணியில் இரண்டு இன்னிங்சில் அதிக ரன்கள் சேர்த்தவர் இவர்தான். எனினும் அந்த அணி 167 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதுவரை நாட்டிங்காம்ஷைர் அணிக்காக அஸ்வின் 3 ஆட்டங்களில் விளையாடி 23 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

Tags : #COUNTY #ASHWIN