‘தொடர்ந்து 2 முறை பாதியிலேயே திரும்பிய அஸ்வின்’.. என்ன நடந்தது?.. மீண்டும் வெடித்த சர்ச்சை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 30, 2019 12:17 AM
ஹைதராபாத் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பஞ்சாப் அணி தோல்வியைத் தழுவியது.

ஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசனின் இன்றைய(29.04.2019) போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் சாகா பேட்டிங் செய்ய களமிறங்கினர். இதில் சாகா 28 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த மனிஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்ந்த வார்னர் அதிரடியாக விளையாடினார். இதில் வார்னர் 81 ரன்களும், மனிஷ் பாண்டே 36 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்களை ஹைதராபாத் அணி எடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணியிடம் 45 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோல்வியைத் தழுவியது. இதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 79 ரன்கள் அடித்திருந்தார்.
இப்போட்டியின் முதல் இன்னிங்கிஸ்ஸில் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் 2 முறை பந்து வீச வந்து பாதியிலேயே திரும்பி சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அஸ்வினுக்கு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
— Vinay Tripathi (@VinayTr85616518) April 29, 2019
