‘அஸ்வின் இருக்கும் போது இத பண்ணலாமா’.. இணையத்தை கலக்கும் அஸ்வின் செய்த வைரல் அவுட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 09, 2019 12:28 AM

முகமது நபியை ரன் அவுட் செய்த அஸ்வின் வீடியோ இணையதளத்தில் வைரலாக வருகிறது.

WATCH: Nabi becomes victim of an unfortunate run out by Ashwin

ஐபிஎல் டி20 லீக்கின் 22 -வது போட்டி இன்று(08.04.2019) பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்கார்ரகளாக வார்னர், பேர்ஸ்ட்டோ களமிறங்கினர். இதில் பேர்ஸ்ட்டோ 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து வந்த விஜய் சங்கர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை ஹைதராபாத் அணி எடுத்தது. இதில் அதிபட்சமாக வார்னர் 70 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 19.5 ஓவர்களின் முடிவில் 151 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 71 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

போட்டியின் 14 -வது ஓவரை அஸ்வின் வீசினார். அதனை எதிர் கொண்ட கே.எல்.ராகுல் அடித்த பந்தை அஸ்வின் கையில் பிடித்ததை அறியாமல் முகமது நபி ரன் எடுக்க ஓடுனார். இதனால் அவரை அஸ்வின் ரன் அவுட் செய்து வெளியேற்றினார்.

Tags : #IPL #IPL2019 #KXIPVSSRH #ASHWIN #NABI #VIRALVIDEO