நானும் இங்கிலாந்துக்கு வரேன் பாய்ஸ்.. திடீரென விலகிய ஆஸ்திரேலிய வீரர், அஸ்வினுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 24, 2019 06:55 PM

இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தேர்வாகியுள்ளார்.

Nottinghamshire sign Ashwin as replacement for James Pattinson

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் டெஸ்ட் , ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். தற்போது இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், சஹால் ஆகியோரின் வரவால் அஸ்வினின் வாய்ப்பு குறைந்துள்ளது. ஆனாலும் டெஸ்ட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் விளையாடி வருகிறார். கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் விளையாடினார்.

இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் தொடரில் நாட்டுங்காம்ஷைர் அணிக்கு விளையாட அஸ்வின் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த அணியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பேட்டின்சன் விலகியதால் அந்த வாய்ப்பு அஸ்வினுக்கு சென்றுள்ளது. கடந்த 2017 -ம் ஆண்டு நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட் தொடரில் வொர்சஸ்டர்ஷைர் அணியின் சார்பாக அஸ்வின் விளையாடி 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இத்தொடரில் விளையாட இருப்பது குறித்து கூறிய அஸ்வின்,‘கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட இருப்பதை நினைத்தால் சந்தோஷமாக உள்ளது. இதற்கு முந்தைய போட்டியில் சிறப்பாக விளையாடினேன். டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார். அதேபோல் கவுண்டி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வீரர் ரஹானே ஹாம்ஷைர் அணியின் சார்பாக விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #NOTTINGHAMSHIRE #ASHWIN #COUNTY #CRICKET