‘கன்ஃபியூஸ் ஆகுற அளவுக்கு அப்டி என்ன பண்ணாரு அஸ்வின்’.. வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 06, 2019 06:17 PM
இன்றைய போட்டியில் இரு விதமாக பந்து வீசிய பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் டி20 லீக்கின் 18 -வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று(06.04.2019) நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதும் முதல் போட்டி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் காயம் காரணமாக சென்னை அணியில் பிராவோ, லுங்கி நிகிடி போன்ற ‘டெத் ஓவர்’ பௌலர்கள் இல்லாதது பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. இந்நிலையில் இவர்களுக்கு பதிலாக டு பிளசிஸ் , ஹர்பஜன் சிங், மற்றும் புதிதாக வந்த நியூஸிலாந்து வீரர் ஸ்காட் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.
இதனை அடுத்து இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சன் மற்றும் டு பிளஸிஸ் களமிறங்கி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். இதில் வாட்சன் 26 ரன்களும், டு பிளஸிஸ் 54 ரன்களும் எடுத்து அசத்தினர். இதனை அடுத்து கடைசியாக இறங்கிய தோனி 4 பவுண்ட்ரிகள், 1 சிக்ஸர் அடித்து 37 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார் . 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை சென்னை அணி எடுத்தது.
போட்டியின் 8 -வது ஓவரை வீசிய அஸ்வின் புதுவிதமாக இரு பந்துகளை வீசினார். அதில் வேகப்பந்து வீச்சாளர் போன்றும், சென்னை அணியின் ஆல்ரவுண்டரான கேதர் ஜாதவ் போல் ஒரு பந்தும் வீசினார்.
இந்நிலையில் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.
