'உலகக் கோப்பையை இந்த அணிதான் வெல்லும்'... 'அவரே சொல்லிட்டாரு'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jun 03, 2019 09:07 PM

உலகக் கோப்பை இறுதியாட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி, இந்திய அணி கோப்பையை வென்று தாய்நாடு திரும்பும் என்று பிரபல சுழற்பந்து வீச்சாளர் கணித்துள்ளார்.

Ravichandran Ashwin reveals his favorite team to win World Cup 2019

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. எதிர்பாராத ட்விஸ்ட்களும் அரங்கேறி வருகின்றன. அரையிறுதி, இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகள் குறித்து பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த உலகக் கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தியா அணியின் சுழல் பந்துவீச்சாளராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் எந்தெந்த அணிகள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என கணித்துள்ளார். அஸ்வின் கூறியதாவது, 'இங்கிலாந்து சிறப்பாக செயல்படுவதோடு, உள்ளூரில் விளையாடுவது மிகப்பெரிய பலம் என தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகமாக இருக்க காரணம் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் தான். ரோகித் சர்மா, சிகர் தவான், விராட் கோலி போன்ற மிகச் சிறந்த வீரர்களின் வரிசை உள்ளது.

அதோடு வளர்ந்து வரும் ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டராக அதிரடி காட்டுவதோடு, அனுபவ தோனி சிறப்பாக அணியை வழிநடத்துகிறார். அதோடு சுழலில் அசத்தும் சஹால் - குல்தீப் ஒரு புறம் என்றால், கடைசி ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பும்ரா மிரட்டுவது அற்புதம். இந்த அற்புத கலவை எந்த அணியையும் ஆட்டம் காண வைக்க முடியும் என்பதால் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேற அதிக வாய்ப்புள்ளது' என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #ASHWIN #TEAMINDIA