‘உஷார் மன்னன்பா வார்னர்.. பின்னே.. பவுலர் அஷ்வினாச்சே’.. கிரவுண்டில் நடந்த வைரல் காரியம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Apr 09, 2019 01:56 PM

அஷ்வினின் பவுலிங்கின்போது, கிரீஸில் நின்ற வார்னர் செய்த காரியம் பலரையும் கவர்ந்ததோடு, சுவாரஸ்யத்தை உருவாக்கியுள்ளது.

Watch: how Warner backs up at non-striker\'s end for Ashwin ViralVideo

ஐபிஎல் சீசன் 11 களைகட்டியிருக்கும் இந்த வேளையில், அஷ்வினின் மன்கட் அவுட் சர்ச்சை கிரிக்கெட் உலகமே அறிந்த ஒன்றுதான். ஆனாலும் கிரிக்கெட் வீரர் அஷ்வின், தன் மனசாட்சி சுத்தமாக இருப்பதாகவும் விதிப்படி, தான் செய்தது சரிதான் என்றும், அது தவறு என்றால் ரூல்ஸ் எதற்காக அப்படி வைக்கப்பட்டுள்ளது? பேட்ஸ்மேன் கிரீஸில் நிற்கவேண்டிய பொறுப்புள்ளது, இல்லாவிட்டால் ரூல்ஸை மாற்றுங்களேன் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

எனினும் பட்லரின் அவுட்டுக்குப் பிறகு, அஷ்வின் பவுலிங் செய்யும்போது பேட்ஸ்மேன் எவ்வளவு விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய், சமீபத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி மோதிய ஐபில் போட்டியில், ஹைதரபாத் அணியைச் சேர்ந்த வார்னர் செய்துள்ள வைரலான காரியம் இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது. அதன்படி வார்னரின் சகவீரரான முஜீப் அஷ்வினின் பந்தை எதிர்நோக்கி ஆடிக்கொண்டிருக்கிறார். அப்போது வார்னர் பவுலரின் அருகே உள்ள கிரிஸீல் நின்றுகொண்டிருக்கிறார். 

பவுலர் அஷ்வின் தனது தலைசாய்த்து பந்தை டெலிவரி செய்யும் வரை, கிரீஸில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அதாவது முழுவதுமாய் நகர்ந்துவிடாமல், முழுமையாக அஷ்வினின் கைகளில் இருந்து பந்து டெலிவரி ஆன பிறகு அதே வேகத்தில் கிரீஸில் இருந்து பேட்டை எடுத்துக்கொண்டு ரன் ஓடத் தொடங்கியுள்ளார். அதுவரை அஷ்வினின் டெலிவரிக்கேற்ப கிரீஸில் இருந்து வார்னர் பேட்டை நகர்த்திக்கொண்டே சென்றுள்ள சம்பவம் இரண்டு விஷயங்களைக் காட்டுகிறது.

ஒன்று அஷ்வின் பவுலிங் போடும்போது பேட்ஸ்மேன் எப்படி இருக்க வேண்டும் என்பதை வார்னர் காட்டியுள்ளார். இன்னொன்று வார்னர் அவ்வளவு உஷாராக இருக்கிறாராம் என்பன போன்ற ரசிகர்களின் கமெண்டுகள் ஒருபுறம் வந்துகொண்டிருக்க, விக்கெட்டுகளுக்கு இடையிலான உலகின் வேகமான ரன்னர் என்றழைக்கப்படும் வார்னரின் இந்த உஷாரான அணுகுமுறை விளையாட்டு ரசிகர்கள் பலரையும் கவர்ந்ததோடு, இதுதான் விளையாட்டு, ஒரு உஷார் இன்னொரு உஷாரை கண்டுபிடித்துவிடுவார், அஷ்வினை வார்னர் கண்டுபிடித்திருப்பார் என்றும் கமெண்டுகள் எழுந்துள்ளன.

Tags : #IPL #IPL2019 #ASHWIN #WARNER