‘வில்லனா பாக்காதீங்க.. மனசாட்சி சுத்தம்’.. மன்கட் அவுட் விவகாரத்தில் மீண்டும் வெடிக்கும் ஐபிஎல் வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Apr 05, 2019 05:56 PM

மன்கட் அவுட் விவகாரம் தொடர் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தனக்கு அவுட் கொடுத்தது தவறு என்றும், அஸ்வின் செய்தது ஒரு நல்ல தொடருக்கான அழகான தொடக்கம் அல்ல என்றும் விமர்சித்திருந்தார்.

\'i\'m not a villain\',Cricketer Ashwin talks over mankad out controversy

இதனிடையே ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு டாக் ஷோவில் அஸ்வினின் புகைப்படத்தை கிழித்து விமர்சனங்களை முன்வைத்தார். ஆனால் அஸ்வினோ ஜேம்ஸ் ஆண்டர்சனின் விமர்சனம் எல்லாம் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறினார். இதேபோல், தான் செய்தது சரிதான் என்றும் விதிப்படி இது அவுட்தான், இல்லை என்றால் ரூலை மாற்றுங்கள் என்றும் கூறும் அஸ்வின் தன் மனசாட்சி சுத்தம் என்று பேசியிருக்கிறார்.

இதுபற்றி ஆஜ்-தக் டிவியில் பேசிய அஸ்வின், பட்லர் சுமார் 4-5 முறை கிரீஸை விட்டு நகர்ந்ததை பார்த்ததாகவும், விதிப்படி கிரீஸுக்குள் நிற்கும் பொறுப்பு பேட்ஸ்மேனுக்கு இருக்கிறது என்றும், தன் மனசாட்சி சொல்வதே தனக்கு பிரதானமாக இருப்பதாகவும், தன்னை பற்றி தெரிந்தவர்களுக்கு, தான் சட்டவிரோதமாக எதையும் செய்யக்கூடியவரல்ல என்பது தெரியும் என்றும், இதனால் அஸ்வின் வில்லன் அல்ல, அது தன் கேரக்டரும் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விதியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதே விளையாட்டு என்று கூறிய அஸ்வின், ஒருவேளை தான் செய்தது ஸ்போர்ஸ்மென் ஸ்பிரிட் அல்ல என்று சொன்னால் ரூல்ஸை மாற்றுங்கள். 1 ரூபாய் திருடினாலும் திருட்டுதானே என்று பட்லரை அவுட் செய்ததற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

Tags : #IPL #IPL2019 #MANKAD #CONTROVERSY #ASHWIN