‘ஒரு மெல்லிசான கோடு அத தாண்டுனா அஸ்வின் அவுட் பண்ணிருவாரு’..அடுத்த மன்கட்டா?.. வைரலாகும் வார்னரின் செயல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 08, 2019 10:46 PM
வார்னரின் நிதானமான ஆட்டத்தால் பஞ்சாப் அணிக்கு 151 என்ற இலக்கை ஹைதராபாத் நிர்ணயத்துள்ளது.

ஐபிஎல் டி20 லீக்கின் 22 -வது போட்டி இன்று(08.04.2019) பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்று வருகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்கார்ரகளாக வார்னர், பேர்ஸ்ட்டோ களமிறங்கினர். இதில் பேர்ஸ்ட்டோ 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து வந்த விஜய் சங்கர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை ஹைதராபாத் அணி எடுத்தது. இதில் அதிபட்சமாக வார்னர் 70 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து அசத்தினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது அந்த அணி வீரர் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் அவுட் செய்தார். இந்நிலையில் இப்போட்டியின் 7 -வது ஓவரை அஸ்வின் வீசினார். அப்போது அஸ்வின் பந்து வீச ஓடி வரும் போது சுதாரித்துக் கொண்ட வார்னர் கிரீஸ்ஸில் பேட்டை வைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை அடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.
