‘என்னது இது உண்மையா..?’ பிரபல முன்னாள் வீரர் குறித்துப் பரவிய செய்தியால் அதிர்ச்சியடைந்த அஸ்வின்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | May 27, 2019 05:40 PM

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா இறந்து விட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய செய்திக்கு இந்திய அணி வீரர் அஸ்வின் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

Fake news claiming Jayasuriyas death shocks Ashwin

சமீபத்தில் ஜெயசூர்யா கனடா சென்றபோது அங்கு சாலை விபத்தில் படுகாயமடைந்தார் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அஸ்வின் தனது டிவிட்டர் பக்கத்தில், “ஜெயசூர்யா பற்றிய செய்தி உண்மையா?  வாட்ஸ்அப்பில் நான் இது குறித்த செய்தியைப் பார்த்தேன். ஆனால் டிவிட்டரில் இது பற்றி எதுவும் இல்லை” என அதிர்ச்சி தெரிவித்திருந்தார்.

ஆனால், தான் இறந்துவிட்டதாக பரவிய செய்தியை மறுத்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஜெயசூர்யா, “என் உடல்நலம் சார்ந்து சில இணையதளங்கள் பொய்யான செய்தியை வெளியிடுகின்றன. அதை யாரும் நம்ப வேண்டாம். நான் இலங்கையில்தான் இருக்கிறேன். சமீபத்தில் கனடா செல்லவே இல்லை. தயவுசெய்து பொய்யான செய்திகளைப் பகிர்வதைத் தவிர்க்கவும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags : #ICCWORLDCUP2019 #ASHWIN #JAYASURYA