இது மட்டும் நடக்கலனா சிஎஸ்கே ஒருவேளை செயிச்சிருக்குமோ?.. ‘முரளி விஜயால் செம்ம கடுப்பான தோனி’.. வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | May 08, 2019 11:09 AM
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் முரளி விஜய் ஒரு கேட்ச்சை தவறவிட்டதால் தோனி கோபமாக பார்க்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் டி20 தொடரின் லீக் சுற்றுகள் முடிந்து தகுதிசுற்றி 1 நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல், இரண்டு இடங்களில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை எடுத்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாகினர். தோனி(37) மற்றும் அம்பட்டி ராயுடு(42) கூட்டணி நிதானமாக விளையாடி சரிவில் இருந்த ரன் ரேட்டை உயர்த்தினர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி 18.3 ஓவர்களின் முடிவில் 132 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில் அதிரடியாக விளையாடிய சூர்யக்குமார் யாதவ் 71 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். ஆனால் போட்டியின் 5 -வது ஓவரிலேயே சூர்யக்குமார் யாதவின் கேட்ச் ஒன்றை முரளி விஜய் தவறவிட்டார். இதனால் கடுப்பான தோனி முரளி விஜயை முறைத்து பார்த்தார். இதேபோல் வாட்சனும் ஒரு கேட்ச்சை இப்போட்டியில் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
— Vinay Tripathi (@VinayTr85616518) May 7, 2019
