‘தன் உயிரை பனையம் வைத்து 2 உயிரை காப்பாற்ற 60 அடி கிணற்றில் இறங்கிய காவலர்’.. குவியும் பாராட்டுகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | May 29, 2019 06:13 PM

60 அடி கிணற்றில் உயிருக்கு போராடிய இருவரை உடனடியாக மீட்ட காவலரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

WATCH: Police jumps into 60 feet deep well and rescues 2 labourers

தெலுங்கான மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள மடிப்பள்ளி என்ற கிராமத்தில் கிணற்றில் தூய்மை செய்ய இறங்கிய இருவர் மூச்சு திணறி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது.

இதனை அடுத்து போலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். கிணற்றுக்குள் இருவரும் ஆக்ஸிசன் இல்லாமல் மூச்சுவிட திணறியை உணர்ந்த இன்ஸ்பெக்டர் கொரிபெல்லி சுஜன் ரெட்டி, தீயணைப்பு வாகனத்தை எதிர்பார்க்காமல் உடனடியாக கிணற்றில் இறங்கி இருவரையும் மீட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரையும் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டதும் இன்ஸ்பெக்டர் கொரிபெல்லி சுஜன் ரெட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மேலும் இதுகுறித்து தெரிவித்த இன்ஸ்பெக்டர் கொரிபெல்லி சுஜன் ரெட்டி, ‘கிணற்றில் இருவர் சிக்கிக்கொண்டது தொடர்பாக எங்களுக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக அங்கே சென்றோம். மக்கள் சுற்று நின்று வேடிக்கைப் பார்த்தார்களே தவிர யாரும் அவர்களை காப்பாற்றவில்லை. இதனால் கயிற்றின் உதவியுடன் கிணற்றில் இறங்கி அவர்களை மீட்டேன். அவர்களை காப்பாற்றியதால் எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

Tags : #TELANGANA #POLICE #RESCUED #VIRALVIDEO