‘கொஞ்சம் இருங்க தம்பி, மொதல்ல அங்க பாருங்க’.. பங்களாதேஷ் வீரரை அலெர்ட் பண்ண ‘தல’யின் வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | May 29, 2019 12:03 PM
மைதானத்தில் வங்கதேச வீரரின் ஃபீல்டிங்கை தோனி சரிசெய்ய சொல்லிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தயா-வங்கதேசம் இடையேயான பயிற்சி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் கே.எல்.ராகுல் மற்றும் தோனி ஆகிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். அதேபோல் பந்துவீச்சாளர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் சஹால் தலா 3 விக்கெட்டுகளையும் பும்ரா 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதில் 5 ஓவர்களை வீசிய புவனேஸ்வர்குமார் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. ஆனாலும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து வங்கதேச பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.
இப்போட்டியில் தோனி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது வங்கதேச வீரர்களின் ஃபீல்டிங்கை சரிசெய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முதல் இன்னிங்ஸின் 40 -வது ஓவரின் போது வங்கதேச வீரர் ஒருவர் தவறான இடத்தில் நின்று ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார். இதனை கவணித்த தோனி பந்துவீச வந்த வங்கதேச வீரரை நிறுத்தி ஃபீல்டிங் தவறை சுட்டிக்காட்டினார். இதனை அடுத்து அந்த வீரர் சரியான இடத்துக்கு சென்றார். தோனியை ஃபீல்டிங்கில் கூட யாரும் ஏமாற்ற முடியாது என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர்.
— Thala was Not Out (@BattingInFinal) May 28, 2019
