‘இந்த மனசுக்கு ஒரு பெரிய சல்யூட் சார்’.. சிஆர்பிஎப் வீரரின் மனிதாபிமான செயல்.. குவியும் பாராட்டுக்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 15, 2019 04:03 PM

மாற்றுதிறனாளி குழந்தை ஒன்றுக்கு சிஆர்பிஎப் வீரர் உணவை ஊட்டிவிடும் வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

WATCH: CRPF jawan feeds Kashmiri boy, video goes viral

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் ராணுவ வீரர்களின் மீது நடந்த கொடூரத் தாக்குதலை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 -க்கும் அதிகமான சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

புல்வாமா தாக்குதலின் போது சென்ற 70 வாகனங்களில் ஒன்றில் ஓட்டுநராக பணியாற்றியவர்தான் சிஆர்பிஎப் வீரர் இக்பால் சிங். இவர் ஸ்ரீநகர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்துள்ளார். அப்போது ராணுவ வீரர்களுக்கான உணவு வந்துள்ளது. அப்பகுதியில் இருந்த சிறுவன் பசியுடன் இருப்பதை அறிந்து சிறுவனின் அருகில் உணவை வைத்துவிட்டு சென்றுள்ளார். ஆனால் சிறுவன் சாப்பிடாமல் உணவை பார்த்தவாறு இருந்ததை இக்பால் கவணித்துள்ளார்.

இதனை அடுத்து சிறுவன் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதை பார்த்த இக்பால் உணவை சிறுவனுக்கு ஊட்டிவிட்டுள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த அனைவரும் ராணுவ வீரர் இக்பாலை பாராட்டிய வண்ணம் உள்ளனர்.

Tags : #CRPFJAWANS #CRPF #VIRALVIDEO