'இந்த லெவலுக்கு இறங்கி வந்து குரங்கு செய்த தரமான சம்பவம்'.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | May 02, 2019 05:48 PM

சுங்கச் சாவடியில் குரங்கு ஒன்று பணத்தை திருடிச் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

monkey steals cash from a toll booth cash counter in kanpur

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் பாரா பகுதியில் சுங்கச் சாவடி உள்ளது. அந்தச் சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டணம் கொடுக்கும் இடத்தில் ஊழியர் ஒருவர் உட்கார்ந்து கொண்டு இருந்தார். அப்போது சுங்கச் சாவடியில் ஒரு வெள்ளை நிற கார் வந்து நின்றது.

அந்தக் காரிலிருந்து வெளியே வந்த குரங்கு, சுங்கச் சாவடி ஊழியரின் மேலே ஏறியது. அப்போது, குரங்கை ஊழியர் தட்டிவிடுகிறார். ஆனால் அவரைத் தாண்டிச் சென்று ஊழியரின் தோள்பட்டையிலிருந்து இறங்கி, பக்கத்திலுள்ள பணப் பெட்டியிலிருந்து ஒரு கட்டு பணத்தை தூக்கிக்கொண்டு மறுபடியும் வெள்ளை காரில் நுழைகிறது.

அப்போது வெள்ளைநிற காரை ஓட்டிவந்தவர், குரங்கை தள்ளிவிடுகிறார். அதற்குள் ஊழியர் குரங்கிடமிருந்து பணம் பறிக்க முயல்கிறார். ஆனால் அந்த குரங்கு வேகமாக பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிடுகிறது. இது அனைத்தும் அங்குள்ள வீடியோவில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையிடம் சுங்கச்சாவடி சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குரங்கு 5,000 ரூபாய் பணத்தைத் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே இரண்டு முறை இதேபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது என்று சுங்கச் சாவடியில் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் வரும் மர்மநபர் ஒருவர், குரங்கை பழக்கி இவ்வாறு பணம் திருடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் அதுபற்றிய முழுவிபரம் இன்னும் தெரியவில்லை. இதையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த காட்சிகள் சமூகவலைத்தளம் மற்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #MONKEY #VIRALVIDEO