உயிருக்கு போராடிய தேர்தல் அதிகாரி.. '45 நிமிஷம் போனில் கேட்டு முதலுதவி செய்த CRPF வீரர்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Apr 21, 2019 11:25 AM

அண்மையில் ஏப்ரல் 18-ஆம் தேதி நாடு முழுவதும் நிகழ்ந்த நாடாளுமன்றடத்தின் 2-ஆம் கட்டத் தேர்தல் காஷ்மீர் மாநிலத்தின் புச்போரா பகுதியில் பெண்கள் பள்ளி ஒன்றில் வாக்குச்சாவடி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

CRPF jawan saves polling officer with doctors guidance through phone

இங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவருக்கு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துவிட்டார். அந்த சமயத்தில் அனைவரும் பதற்றமடைந்தபோது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த CRPF அதிகாரி குமார் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகியுள்ளார். ஆனால் அப்போதும் காப்பாற்ற முடியாத சூழல் உண்டானதால், தனது சீனியர் டாக்டரான சுனீத் கான் என்கிற மருத்துவரை செல்போனில் அழைத்துள்ளார்.

அந்த மருத்துவரின் ஆலோசனைப்படி, முதலில் டாக்டரை வரவழைத்த CRPF வீரர் குமார், பிறகு தனது சீனியர் டாக்டர் சுனீத் கான் சொல்வதைக் கேட்டுக்கேட்டு 45 நிமிடங்கள் முதலுதவி செய்து, தேர்தல் அதிகாரியை காப்பாற்றியுள்ளார். அதன் பின்னர் அங்குவந்த ஆம்புலன்ஸில் தேர்தல் அதிகாரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சுமார் 45 நிமிடங்களில்  cardiopulmonary resuscitation (CPR), mouth-to-mouth respiration முதலானவற்றை, போனில் கேட்டு கேட்டு சரியாக செய்த வீரர் குமாரின் செயலாலேயே தேர்தல் பணி அதிகாரி பிழைத்ததாக, அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.