'மனிதர்களோடு மனிதர்களாக மழைக்கு ஒதுங்கும் கொரில்லாக்கள்'... வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | May 13, 2019 06:24 PM

கொரில்லாக்கள் மழையில் நனையாமல் இருக்க, தங்கள் குட்டிகளை அரவணைத்துக் கொண்டு ஒதுங்கிகொள்ளும் காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

gorillas try to stay out of rain in hilarious viral video

தெற்கு கரோலினாவில் உள்ள ரிவர்பேங்ஸ் உயிரியல் பூங்காவில் சில கொரில்லாக்கள் திறந்த வெளியில் விடப்பட்டிருந்தன. அப்போது திடீரென மழை பெய்ததால் கொரில்லாக்கள் திகைத்தன. அதன்பின்னர் குட்டியுடன் இருந்த கொரில்லாக்கள் மனிதர்களைப் போலவே தங்கள் குட்டிகளை அரவணைத்துக்கொண்டு மழையில் நனைய முடியாத பாதுகாப்பான இடத்தை தேடிப்போய் நின்றுகொண்டன. 

மழை பெய்துக்கொண்டிருந்தபோது, மழை நின்றுவிட்டதா என எட்டி எட்டி மனிதனைப் போன்றே கொரில்லாக்கள் பார்த்தவண்ணம் இருந்தன. பின்பு தனது குட்டியை அரவணைத்த வண்ணம், ஒரு கொரில்லா வேறு இடத்திற்கு சென்றது. இதனைப் பின்தொடர்ந்த மற்ற கொரில்லாக்களும் மழைக்கு ஒதுங்கி செல்லும் காட்சிகள் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மழைக்குப் பயந்து ஓடிய கொரில்லாக்களின் வீடியோ காட்சிகள் வெளியாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதுடன், ஏகப்பட்ட லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

Tags : #GORILLA #SOUTHCAROLINA #HILARIOUS #VIRALVIDEO