‘நெருங்கி வரும் காட்டுத் தீ’.. ‘முட்டையைக் காக்க போராடும் பறவை’ வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | May 21, 2019 09:05 PM
தீயில் இருந்து முட்டையைக் காக்க போராடும் பறவையின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ரஷ்ய நாட்டில் இருக்கும் டாம்போவ் என்னும் நகரத்தில் இருக்கும் கிராமம் ஒன்றில் கடந்த மாதம் 28 -ம் தேதி வயலில் தீ பற்றி எரிந்துள்ளது. பல ஏக்கர் உள்ள அந்த வயலில் யாரோ தீயை வைத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக அறுவடை முடிந்த பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதில் கொழுந்துவிட்டு எரியும் தீயில் இருந்து பறவை ஒன்று தனது முட்டை காக்க போராடும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
ஸ்ட்ரோக் என்னும் பறவை மின் கோபுரம் ஒன்றில் கூடுகட்டி முட்டையிட்டுள்ளது. கீழே வயலில் எரியும் தீ மளமளவென வருவதை கண்ட ஸ்ட்ரோக் பறவை தீயின் வெப்பம் முட்டையை பாதிக்காதவாறு உடனடியாக தனது இறகால் முட்டை மூடி பாதுகாக்கிறது. மின் கோபுரத்தில் உச்சியில் சிசிடிவி கேமரா பொருத்தப் பட்டிருந்ததால் இந்த காட்சிகள் அனைத்தும் கேமராவில் பதிவாகி இருந்துள்ளது. மீனை மட்டும் உணவாக உண்ணும் ஸ்ட்ரோக் பறவை ரஷ்யா, ஜப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது.