‘யார்றா நீ..?’ அர்னால்டு முதுகில் ஏறி உதைத்த அடையாளம் தெரியாத நபர்.. பதற வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 19, 2019 12:44 PM

ஹாலிவுட் புகழ் நடிகர் அர்னால்டை ஒருவர் முதுகில் தாக்கும் வீடியோ இணையத்தில் வெகுவேகமாக பரவி வருகிறது.

Arnold Schwarzenegger got kicked in the back by a guy goes bizarre

பிரிடேட்டர், கமாண்டோ, டெர்மினேட்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ஆக்‌ஷன் வீரராக உலகம் முழுவதும் புகழ்பெற்றதோடு, குழந்தைகளைக் கவர்ந்த முக்கியமான நடிகரான அர்னால்டுவைத்தான் ஒருவர் முதுகில் தாக்கி, உதைக்கும் அந்த வீடியோ இணையத்தில் பலரையும் அதிரவைத்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அர்னால்டு கிளாசிக் என்கிற விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற அர்னால்டு, அந்த விளையாட்டுப் போட்டி நிர்வாகிகளுடனான ஆலோசனையில் ஈடுபட்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எங்கிருந்தோ வந்த அர்னால்டை முதுகில் உதைத்துத் தாக்குகிறார்.

கலிஃபோர்னியாவின் முன்னாள் ஆளுநராகவும் அரசபதவி வகித்தவர் என்கிற முறையில் அர்னால்டுக்கு இருக்கும் டைட்டான பாதுகாப்பையும் மீறி இவ்வாறான சம்பவம் நிகழ்ந்திருப்பது பலரையும் பதைபதைக்க வைத்துள்ளது.  அந்த நபர் பாதுகாவலர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆனால் அவர் ஏன் உதைத்தார் என்பதற்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை.

Tags : #ARNOLD #VIRALVIDEO #SOUTHAFRICA #BIZARRE