”இந்த பொன்னுகிட்ட என்னமோ இருக்கு”....பறவையை வைத்து சிறுமி செய்யும் செயல்! வைரல் வீடியோ

முகப்பு > செய்திகள் > உலகம்

By Arunachalam | May 03, 2019 11:33 AM

பறவைகளை செல்லமாக வளர்த்து அதை அழகாக பராமரித்து பாதுகாப்பாக வளர்த்து பார்த்திருக்கிறோம். மேலும், மற்ற நாடுகளை உளவு பார்க்க கூட பறவைகளை அனுப்பி பார்த்திருக்கிறோம் ஆனால் இங்கு ஒரு சிறுமி தன் பாதுகாப்புக்காகவும், அடுத்தவர்களை தாக்கவும் தான் வளர்க்கும் பறவையை பயன்படுத்தி வருகிறார்.

girl trained his bird by attacking others by her shouting

இதில், இந்த சிறுமி தான் வளர்க்கும் பறவையை தன்னுடைய பாதுகாப்பிற்காக இவ்வாறு பயிற்சியளித்து வளர்த்துள்ளார். அதன்படி, இந்த சிறுமி எந்த நபரை பார்த்து கத்துகிறாரோ உடனடியாக இந்த பறவை அந்த நபரை சரமாரியாக தாக்கிவிடும்.

இந்நிலையில், இந்த சிறுமியினுடைய மாமாவான லோர்ட் ஃப்ளோகோ இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, ‘என்னுடைய மருமகள் தன் பறவையை பிறரை தாக்கும் அளவுக்கு தயார்படுத்தியுள்ளார்’ என்று கூறியுள்ளார்.

             வீடியோ: https://twitter.com/Apex_sH/status/1123337981677453313

 


 

இதனையடுத்து, இந்த சிறுமியை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் சிலர் ‘இந்த சிறுமிக்கு எவ்வளவு பவர் இருக்கிறது’ என்று புகழ்ந்துள்ளனர்.

Tags : #GIRL #BIRD #VIRAL