‘எனக்கு சின்ன வயசுல இதுவா ஆகணும்னு தான் ஆசை’.. ‘யாராவது நல்லா இருக்காணு பாத்து சொல்லுங்க’.. வைரலாகும் ‘தல’யின் சின்ன வயசு சீக்ரெட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 20, 2019 04:05 PM

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான தோனி தனது சிறுவயது ரகசியங்களைப் பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

WATCH: MS Dhoni reveals he wanted to be an artist

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான தோனியின் கேப்டன் ஆட்டத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடுவதால் இந்தியாவைப் பொறுத்தவரை தமிழகத்தில் அதிக ரசிகர்களை கொண்டுள்ளார். மேலும் இவரை சிஎஸ்கே ரசிகர்கள் செல்லமாக ‘தல’ எனவும் குறிப்பிட்டு வருகின்றனர்.

தோனி தலையிலான இந்திய அணி ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை மற்றும் டி20 போட்டிக்கான உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. அதேபோல் ஐபிஎல் தொடரிலும் தோனி தலைமையிலான சிஎஸ்கே மூன்று முறை கோப்பை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் தோனி தனது சிறுவயது பொழுதுபோக்கு குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,‘என்னோட சின்ன வயது ரசிகசியத்தை சொல்லப்போறேன். நான் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளேன். அதேபோல் சிறுவயதில் நிறைய ஓவியங்களை வரைந்துள்ளேன். அதற்கான கண்காட்சியை நடத்த உள்ளேன். ஆனால் அதற்கு இன்னும் சிறுது காலமாகும். ஓவியத்தைப் பற்றி தெரிந்தவர்கள், என்னுடைய ஓவியத்தைப் பார்த்து எதாவது அறிவுரை கூறுங்கள். அதை நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்’ என கூறியுள்ளார்.

Tags : #MSDHONI #TEAMINDIA #VIRALVIDEO