'எவ்வளவு ட்ரிக்ஸ்டா உளவுத்துறைக்கு வேல பாக்குதுயா இந்த திமிங்கலம்’.. உஷாரான கடற்படை!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Apr 30, 2019 07:55 PM
ஒரு நாட்டின் முக்கியப் படைகளாக முப்படைகள் திகழ்ந்தால், அதைவிடவும் அதிமுக்கியமான படை அமைதியாகத் தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கும். அதுதான் உளவுத்துறை. சொல்லப்போனால் இந்த முப்படைகளுக்குமான தகவல்களை சரியான நேரத்தில் தந்து எச்சரிக்கை கொடுக்கும் இடத்தில் இருப்பதே உளவுத்துறை.
அதற்கென பலவிதமான உத்திகளை வைத்திருக்கும் உளவுத்துறை உள்ளூரிலும் சரி, வெளியூரிலும் சரி, தீவிரவாதிகள், கிளர்ச்சியாளர்கள், முக்கியமானவர்கள், முளைவிடுபவர்கள் என தனித்தனியாக பிரித்தறிந்து வைத்திருப்பார்கள். அதனால்தான் ஒரு நாட்டின் உளவுத்துறை நினைத்தால் எவ்வித சலனமுன் இன்றி, சந்தேகத்திற்கு இடமில்லாமல், வேறொரு நாட்டுக்குள் ஊடுருவ முடியும்.
இதேபோல் தன் நாட்டுக்குள் ஊடுருவும் அந்நிய சக்திகளையும் கண்டுபிடிக்க வல்ல ஒரே துறையாகவும் உளவுத்துறை திகழ்கிறது. அப்படித்தான் ரஷ்யாவின் முர்மான்ஸ்க் கடற்படை தளத்தில் இருந்து 445 கி.மீ தொலைவில் இருக்கும் ஆர்க்டிக் தீவுக்குள் வெள்ளை நிற பெலுகா திமிங்கலங்கள் வலம் வந்ததாக நார்வேயில் புகார்கள் எழுந்தன.
மேலும் அதன் தலை மற்றும் உடல் பாகங்களில் பெல்ட் ஒன்று கட்டப்பட்டிருந்ததாகவும், அதில் இருந்த கேமிரா பொருத்தும் தாங்கி ரஷ்யாவில் மட்டுமே அதிநவீனமாக தயாராவது என்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவலையடுத்து, அந்த திமிங்கலமானது உளவுபார்ப்பதற்காக ரஷ்யாவால் அனுப்பப்பட்டது என்று நார்வேயால் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டினை ரஷ்யா மறுத்துள்ளது.