‘8 வருஷத்துக்கு முன்னாடி இதே நாள்’ ‘விருப்பம் இல்லாம அவர்கிட்ட கொடுத்தோம்’.. வைரலாகும் சேவாக் ட்வீட் ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Aug 12, 2019 06:22 PM
8 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2011 -ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்தது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 224 ரன்களை எடுத்தது. ஆனால் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 710 ரன்களை எடுத்து ஷாக் கொடுத்தது.
இதனை அடுத்து நடந்த 2 -வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து எளிதாக தொடரை வென்றது. இப்போட்டியின் முதல் இரண்டு போட்டிகளில் ஆடாத சேவாக் அடுத்த இரு போட்டிகளில் விளையாடி டக் அவுட்டில் வெளியேறினார். இதில் சேவாக் ஆடிய முதல் இன்னிங்ஸில் ஸ்டூவர்ட் பிராடும், 2 -வது இன்னிங்ஸில் ஆண்டர்சனும் அவரை அவுட் செய்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னைத் தானே கிண்டல் அடிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘8 வருடங்களுக்கு முன்பு இதே நாள் இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்ஹாமில் நடந்த இரு டெஸ்ட் போட்டியிலும் நான் பூஜ்ஜியம். இங்கிலாந்துக்கு 2 நாள்கள் பயணம் செய்து 188 ஓவர்கள் பீல்டிங் செய்தோம். விருப்பம் இல்லாமல் இதனை ஆர்யபட்டாவுக்கு (பூஜ்ஜியம்) அர்ப்பணம் செய்ய வேண்டியதாயிற்று’ என சேவாக் பதிவிட்டுள்ளார்.
On this day 8 years ago, I scored a king pair vs England in Birmingham after flying for 2 days to reach England and fielding 188 overs. Unwillingly paid tribute to Aryabhatta :)
If there was zero chance of failure, what would you do ? If you have it figured, do that ! pic.twitter.com/7VchCDASh8
— Virender Sehwag (@virendersehwag) August 12, 2019